--- --:--:-- --

முதலமைச்சர் நாராயணசாமி குறித்து மீனவ சமுதாய பெண்கள் சரமாரியாக ராகுலிடம் புகார்..!

3

புதுச்சேரியில் ராகுல் காந்தியை வைத்துக்கொண்டே காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி குறித்து மீனவ சமுதாய பெண்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

 

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள புதுச்சேரி வந்த ராகுல் காந்தி சோலை நகரில் மீனவர்கள், மீனவ சமுதாய பெண்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அப்போது ராகுல் காந்தியை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி முத்தமிட்டு வரவேற்றுள்ளார்.

 

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமியை வைத்துக்கொண்டு ராகுல் கலந்துரையாடலை தொடங்கியபோது நிவர் புயலின் போது காங்கிரஸ் அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை என மீனவ பெண்கள் குற்றம்சாட்டினார்.

 

தன் மீதான புகார்களை வருத்தங்களை நாராயணசாமியே ராகுலுக்கு மொழிபெயர்த்தார். அடுத்த முறை புதுச்சேரி வரும்போது தன்னை படகில் கடலுக்கு அழைத்து செல்லுமாறு மீனவர்களிடம் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon