--- --:--:-- --

இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் மீண்டும் தொடங்கப்படும்..!

11

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் மீண்டும் தொடங்கப்படும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை இந்த படம் சந்தித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

24 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் ஷங்கரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கேற்ப காஜல் அகர்வால் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019 ஜனவரியில் தொடங்கப் பட்டது.

 

ஆனால் தொடங்கிய சில நாட்களிலேயே இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் ஹாசனுக்கு போடப்பட்ட ஒப்பனை சரியாக பொருந்தவில்லை என்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு குழுவை மாற்றி படப்பிடிப்பை மே மாதத்தில் தொடங்கினார்.

 

ராஜமுந்திரி உள்ளிட்ட சில இடங்களில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கால் அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால் அவர் இல்லாத சில காட்சிகளை மட்டும் இயக்குனர் ஷங்கர் படமாக்கினார். 2019 ஏவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தான் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர்.

 

அதன் பிறகு சில மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் தான் ஷங்கருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் தான் விரைவில் படப்பிடிப்பை தொடங்குவதற்கான தொகையை வழங்க வேண்டும் என்று ஷங்கர் தரப்பில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினார்.

 

ஆனால் ஏற்கனவே 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதால் இனி படத்தின் வெளியீடு வரை
எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்து அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டால் மட்டுமே மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்பதில் லைகா நிறுவனம் உறுதியாக இருந்திருக்கிறது.

 

இதற்கிடையே கமல்ஹாசன் விக்ரம் படத்தின் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். இதனால் பொறுமை இழந்த இயக்குனர் ஷங்கரும் வேறு படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே ராம்சரண் நடிப்பில் அவர் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இதனால் இந்தியன் படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியதனை மறுத்து இருக்கும் ஷங்கர் தரப்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் விளக்கம் அளித்திருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon