--- --:--:-- --

தமிழில் பேசுவதாலும் திருக்குறளை உச்சரிப்பதால் தமிழ் மக்களை ஏமாற்றி விட முடியாது..!

8

மிழில் பேசுவதாலும் திருக்குறளை உச்சரிப்பதால் தமிழ் மக்களை ஏமாற்றி விட முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சேலம் மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் பேசிய வைகோ திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட முடிவுதான் பாஜகவிற்கு தற்போது கிடைக்கும் என்றும் கூறினார். பாஜக உடன் கைகோர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழி சாலை திட்டம் என இயற்கைக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறார் என்று வைகோ கூறியுள்ளார்.

 

அனைத்து துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறிய வைகோ தமிழ் மொழியில் பேசுவதாலும் திருக்குறளை உச்சரிப்பதால் தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon