தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கும் கொரொனா தடுப்பூசி போடப்படும்..!
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளையும் முன் களப் பணியாளர்களின் பட்டியலில் சேர்த்து கொரொனா தடுப்பூசி போடப்பட இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடுப்பூசி தாமதம் ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி உருவாக காலதாமதமாவதாக ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருப்பதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.






