--- --:--:-- --

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளது..!

8

கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக குழிகள் தோண்டும் பணி இன்று தொடங்கியது. கடந்த 11ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தொடக்கிவைத்த ஏழாம் கட்ட அகழாய்வுப்பணிகள் கீழடி அகரம், கொந்தகை, மணலி உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன.

 

ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடத்தின் அருகே பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 6 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.

 

கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அகழாய்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து முறையான அறிவிப்பு வராததால் குறைந்தளவு பணியாளர்களுடன் பணிகள் தொடங்கியுள்ளன.\

 

Leave a Reply

Right Menu Icon