--- --:--:-- --

குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு அடி, உதை..!

7

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இரவு நேரத்தில் குடிபோதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த நபரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.

 

சரவணன் என்ற அந்த நபர் இரவு நேரம் குடித்துவிட்டு வந்து தெருவில் ஆபாசமாக பேசுவது ஸ்கூட்டியில் சென்ற பெண்களை பின்பக்கமாக தட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

நேற்றிரவு பெண் ஒருவருடன் குடிபோதையில் அவன் சில்மிஷத்தில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பகுதி இளைஞர்கள் சரவணனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண்களை விட்டு அவனை செருப்பால் அடிக்குமாறு கூறியுள்ளனர்.

 

போலீசார் மீட்க முயற்சித்த போது இளைஞர்கள் மேலும் ஆவேசம் அடைந்து சரவணனை தாக்கியுள்ளன.ர் நீண்ட போராட்டத்திற்கு பின் அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon