--- --:--:-- --

ஈரோட்டில் சாக்கடையில் சிவப்பு நிறத்தில் செல்லும் தண்ணீர்..!

1

ரோட்டில் சாக்கடையில் சிவப்பு நிறத்தில் தண்ணீர் செல்வதாக மக்கள் அளித்த புகாரின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

டிபி அக்ரகாரம் பெரியதேமோர் சூளை மற்றும் தண்ணீர்பந்தல்பாளையம் பகுதிகளில் ஏராளமான சாய ஆலைகள் தோல் பதனிடும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் சாக்கடையில் சிவப்பு நிறத்தில் நீர் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

 

சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சிவப்பு நிறம் குறித்து விசாரணை நடத்தினார். தண்ணீர்பந்தல் பாளையத்தில் பாலத்தின் கீழ் காட்டப்பட்டுள்ள சாயக்கழிவு மூட்டைகள் மூலம் நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

சமீபத்தில் ஈரோட்டில் சாயக் கழிவுநீர் கால்வாயில் கலந்ததையடுத்து 30 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon