--- --:--:-- --

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 79வது நாளை எட்டியுள்ளது..!

8

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 79வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைகின்றன.

 

வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் அதனை திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon