உயிரிழந்த பூனையின் வயிற்றிலிருந்து மூன்று பூனைக்குட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்த நபர்..!
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த கர்ப்பிணி பூனையின் வயிற்றிலிருந்து மூன்று பூனைக்குட்டிகள் உயிருடன் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருச்சூரில் சாலையில் உயிரிழந்து கிடந்த பூனையை கண்டு அந்த வழியாக சென்ற பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஹரிதாஸ் என்பவர் அதனை அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
அப்போது உயிரிழந்த பூனையின் வயிற்றில் குட்டிகள் உயிரோடு இருப்பதை அறிந்து பிளேடால் வயிற்றைக் கிழித்து பூனைகளையும் வெளியே எடுத்துள்ளார். இதனையடுத்து பூனைக்குட்டிகளை ஹரிதாஸ் தனது வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.






