--- --:--:-- --

காதலனுடன் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்தவுடன் வேறொரு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்..!

11

சென்னையில் நான்கு வருடங்களாக காதலித்து வந்த காதலனுடன் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்த கையோடு வேறொரு காதலனுடன் திருமணம் செய்து வைக்குமாறு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த பெண்ணின் செயல் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.

 

நுங்கம் பாக்கத்தில் சேர்ந்த அம்மு என்று அந்தப்பெண் பேஸ்புக்கில் பழகி திருச்சூரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரை நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

 

வரவேற்பு நிகழ்ச்சியை முடித்த கையோடு மண்டபத்தில் இருந்து தப்பிச்சென்று காதலனுடன் சேர்த்து வைக்குமாறு கோரி ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த நிஷாந்த் என்பவருடன் கிண்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். கார்த்திகை திருமணம் செய்ய பிடிக்காததால் மண்டபத்தில் இருந்து ஓடி வந்து விட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon