--- --:--:-- --

துபாய் வானில் தெரிந்த 2 நிலவுகள்..!

10

துபாய் வானில் இரண்டு நிலவுகள் தெரிவது போல் எடுக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐக்கிய அரபு அமீரக அரசு செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

செவ்வாய்க் கிரகத்தின் புவி வட்ட பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டதைடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு ராட்சத கிரேன் கொண்டு 40 மீட்டர் திரையில் செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ள போபோஸ் மற்றும் டிபோஸ் என்ற நிலவின் பிம்பத்தை உருவாக்கியுள்ளனர்.

 

அல்குத்ரா பாலைவன வானில் தெரிந்த நிலவின் பிம்பத்தை பொது மக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon