--- --:--:-- --

இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைதான நபர் மருத்துவமனை அழைத்து செல்லும் போது தப்பி ஓட்டம்..!

15

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கேனிக்கரை காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமநாதபுரம் முகம்மது மைதீன் என்பவர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் இன்று மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார். இதனால் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடியதனால் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் ஏர்வாடி பகுதியில் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்ட முகம்மது மைதீனை மடக்கி பிடித்தது காவல்துறை.

 

Leave a Reply

Right Menu Icon