--- --:--:-- --

பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று வழங்க அனுமதி..!

6

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை பக்தர்களின் இல்லத்திற்கே கொண்டு சென்று வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

 

அரை கிலோ எடை கொண்ட பஞ்சாமிர்தம் சுவாமியின் அலங்கார புகைப்படம் மற்றும் கோவிலில் இயற்கையாக தயார் செய்யப்படும் விபூதி ஆகியவற்றை அஞ்சலகத்துறையின் இ பேமெண்ட் வழியாக 250 ரூபாய் கட்டணத் தொகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

பக்தர்களின் இல்லத்திற்கு கொண்டு செல்லும் நடைமுறையை செயல்படுத்திட இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளருக்கு அனுமதி வழங்கலாம் என முடிவு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon