--- --:--:-- --

ஆளுநர் உரை இல்லாமல் தொடங்கிய பேரவை..!

7

மேற்கு வங்கத்தில் ஆளுநர் முதல்வர் இடையேயான மோதலின் உச்சகட்டமாக ஆண்டின் முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்ற ஆளுநருக்கு மாநில அரசு அழைப்பு விடுக்கவில்லை. மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத்தொடர் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.

 

ஆண்டின் முதலாவது கூட்டத் தொடரை எல்லா மாநில அரசுகளும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால் மேற்கு வங்கத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுநருடன் முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி கொண்டுள்ள சூழலில் ஆளுநர் ஜெகதீஷ் பேரவையில் உரையாற்றி மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கவில்லை.

 

ஆளுநர் உரை இல்லாத பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசின் செயல்பாடுகளை கண்டித்து எதிர்க்கட்சிகள் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இந்த கூட்டத்தொடரில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon