ஒரு மரத்தின் மதிப்பு 72 லட்ச ரூபாய்..!
சுற்றுச்சூழலை பாதுகாத்தல், மனிதர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குதல் என மரங்களின் 100 ஆண்டு ஆயுள் காலம் இன்றைய காலகட்டத்தில் 72 லட்ச ரூபாய்க்கு சமமானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனிதர்களுக்கு ஆக்சிசன் வழங்கி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மரங்கள் நூறு வருட ஆயுள் காலம் 75 லட்ச ரூபாய்க்கு சமமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விசாரித்த உச்சநீதிமன்றம் மரங்கள் வெட்டப்பட்டது. மத்திய அரசின் முறையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளதா என்றும், அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தது.







