--- --:--:-- --

ஜெயலலிதா நினைவிடத்தை பொது மக்கள் பார்வையிட தடை..!

7

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த 27ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்தார்.

 

அதனை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்கா அமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுப்பணித் துறை கூறியுள்ளது.

 

அந்தப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதால் நினைவிடத்தை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் சிரமத்திற்கு மன்னிக்கவேண்டும் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon