--- --:--:-- --

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு சிலை அமைக்க தமிழக அரசு தயார்..!

4

றைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு சிலை அமைப்பது பற்றி கோரிக்கை மனு அளித்தால் அதை நிறைவேற்ற தமிழக அரசு தயாராக இருப்பதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

திரைப்பட இசை கலைஞர் சங்கத்தில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர், இசையமைப்பாளர் தீனா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.

 

மேலும் மறைந்த பாடகர் எஸ் பி பி யின் உருவ படம் திறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு எஸ்பிபியின் படத்தை திறந்து வைத்துள்ளார் . இதில் நடிகர் பாக்கியராஜ், எஸ்பிபி என் மகனும் பாடகருமான எஸ்பிபி சரண், இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார், எஸ் பி சைலஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

உரையாற்றிய அமைச்சர் கடம்பூர் ராஜு எஸ்பிபி பாடல்கள் தனக்கு மட்டுமின்றி இசை பிரியர்கள் அனைவரின் மனதுக்கும் நெருக்கமானவை என்று உருக்கமாக பேசியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon