வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு..!
வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
வருகிற எட்டாம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள இளநிலை முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் வருகிற 8-ந்தேதி முதல் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அனைத்து திரையரங்குகளிலும் நாளை முதல் 100% இருக்கைகளை பயன்படுத்தி செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேரக் கட்டுப்பாடு இன்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள், கண்காட்சி கூடங்கள் செயல்படவும் அனைத்து மக்கள் குறை தீர்க்கும் நாள் போன்ற பொதுமக்கள் சார்பாக நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு அனுமதித்துள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராமேஸ்வரத்தில் தீர்த்தம் ஆடுதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் 5 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.







