ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்துள்ள முதல்வர் பழனிசாமி..!
ஜெயலலிதா நினைவிடம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடமானது தற்போது முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் பிரம்மாண்டமாக நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. மக்களும் அதிமுக தொண்டர்களும் மெரினா கடற்கரையில் திரண்டுள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். குன்னக்குடி சட்டமன்ற உறுப்பினரும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது பொது மக்களின் பார்வைக்காக நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது.







