விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இராமநாதபுரத்தில் எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இன்று 72 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது இந்நிலையில் டில்லி தலைநகரில் விவசாயிகள் வேளாண் சட்டத்தினை முழுமையாக நீக்கிட வலியுறுத்தி டிராக்டர் பேரிணியில் ஈடுபட்டனர் விவசாயிகள்.
மேலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வெடிப்பு செய்து கூட்டத்தை கலைத்திட செய்தனர் இதில் லேசான தடியடியும் நடத்தியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இராமநாதபுரம் அண்ணா சிலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை எஸ் டி பி ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.







