இந்த ஆண்டுக்கான முதலாவது தமிழக சட்டப்பேரவை கூட்டம் 2 ஆம் தேதி கூடுகிறது..!
இந்த ஆண்டுக்கான முதலாவது தமிழக சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி இரண்டாம் தேதி கூடுகிறது. கலைவாணர் அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
இந்த தகவலை சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என கூறப்படுகிறது.
கொரொனா காரணமாக சட்டப்பேரவை கூட்டம் கடந்த முறை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.







