--- --:--:-- --

இன்று விவசாயிகளுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு..!

3

டெல்லியில் இன்று விவசாயிகளுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 50 நாட்களை கடந்து நீடித்து வருகிறது.

 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்து உள்ளன. வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என்பதில் விவசாய அமைப்புகள் உறுதியாக உள்ளனர்.

 

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் குழுவிற்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று நடைபெறவிருந்த 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக வேளாண் அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

இதற்கிடையில் விவசாயிகள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் முதல்கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களை அலசி ஆராய உள்ள இந்த குழு 2 மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

 

முன்னதாக வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் தலைநகரில் விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணி குறித்து டெல்லி காவல் துறையை முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

Leave a Reply

Right Menu Icon