--- --:--:-- --

தமிழில் அஞ்சல் துறைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு..!

13

மிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் துறை கணக்கர் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்தில் அஞ்சல்துறை கணக்கர் தேர்வுக்கு ஜனவரி 4 அன்று வெளியிட்ட அறிக்கையில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே எழுத முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த தேர்வை தமிழில் நடத்த கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒரு கடிதம் எழுதினார்.

 

இந்த நிலையில் வெங்கடேசனுக்கு அஞ்சல் சேவைகள் வாரிய உறுப்பினர் சந்தோஷ்குமார் எழுதியுள்ள கடிதத்தில் தமிழிலும் தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளது. அதற்கான பின் இணைப்பு அறிவிக்கை வெளியிட்டு இணைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon