--- --:--:-- --

குற்றால அருவி பகுதிக்கு செல்ல 4 நாட்கள் தடை..!

13

னமழை காரணமாக குற்றால அருவி பகுதிக்கு செல்ல 4 நாட்கள் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

 

இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் 17ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அணைகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon