வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!
தென்னிந்தியாவில் வருகின்ற 19ஆம் தேதி வடகிழக்கு பருவமழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் , டெல்டா மற்றும் ஒரு உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 18 சென்டி மீட்டர் மழையும், மணிமுத்தாரில் 16 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






