மாஸ்டர் திரைப்பட காட்சிகள் வெளியானதற்கு காரணம் என்ன..?
நடிகர் விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியான விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் மூலம் காவல்துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்து தற்போது படத்தின் வெளியீட்டு வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளதால் நாளை காவல்துறையில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
மாஸ்டர் படத்தின் காட்சிகளை திரையரங்குகள் பிரோஜெக்டர்களுக்கு கண்வர்ட் செய்து வழங்கும் பிரபல நிறுவனம் ஒன்று மாஸ்டர் படத்திற்கான வெளியீட்டுப் பணிகள் நடந்து வந்ததும் அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் மூலம் இந்த படக்காட்சிகளை வெளியிடவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






