மாஸ்டர் படம் வெளியானது..! ரசிகர்கள் உற்சாகம்..!
சென்னையில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டது ஒட்டி விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஆடிப் பாடியும் உற்சாகமாக கொண்டாடினர். கொரொனா ஊரடங்கால் கடந்த 10 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்டது. திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். நெல்லை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் திரண்டிருந்தனர்.






