போலீஸ்காரரிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர் கைது..!
சென்னை கீழ்பாக்கத்தில் சைபர் கிரைம் போலீஸ்காரரிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றிய தினேஷ்குமார் தெரு சந்திப்பில் சனிக்கிழமை மாலை செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றுள்ளனர். சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்ததில் இரண்டு பேரும் சத்யா நகரைச் சேர்ந்த ராஜேஷ் அரவிந்த் என்பதும், பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து வழி பறிக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை போலீசார் மீட்டுள்ளனர்.






