--- --:--:-- --

வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு கட்டி தரும் கேரள அரசின் திட்டத்தில் முறைகேடு..!

18

வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு கட்டி தரும் கேரள அரசின் லைக் மெசின் திட்ட ஊழல் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை தொடர அனுமதி வழங்கி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . லைக் மெசின் திட்டத்தில் திருவனந்தபுரம் வடக்கான்சேரியில் 20 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.

 

இந்த திட்டத்தின் கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷுக்கு நாளே கால் கோடி ரூபாய் கமிஷன் ஐக்கிய அரபு அமீரகம் நிறுவனம் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.

 

வடக்கில் சிபிஐ பதிவு செய்திருக்கும் சட்டப்பிரிவு பொருத்தமற்றது என்று கூறி விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இரண்டு மாத காலம் தடை விதித்தது. தடை காலம் முடிவடைந்த நிலையில் தடையை நீக்க கோரி சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

 

இதில் கேரள அரசு மற்றும் யூனிட்டாக் கில்டர்சின் மனுக்களை தள்ளுபடி செய்தது. ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தொடர அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon