--- --:--:-- --

இந்திய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட சீன வீரர் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டார்

8

டாக்கின் வாங்ஹாங் ஏரிக்கரையில் இந்திய ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட சீன ராணுவ வீரர் இன்று பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டார்.

 

கடந்த எட்டாம் தேதி இந்திய எல்லைக்குள் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கைது செய்யப்பட்டவரை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த சனிக்கிழமை சீன ராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

 

அதை தொடர்ந்து இன்று இந்திய எல்லைப் பகுதியான சூசூல் மால்ட்டோவில் சீன ராணுவத்திடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். கடந்த மே மாதம் எல்லை பிரச்சினை முடிந்த பிறகு சீன ராணுவ வீரர் இந்திய எல்லைக்குள் நுழைந்தது இது இரண்டாவது தடவையாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon