--- --:--:-- --

பிஜேபிக்கு ஆதரவும் அளித்து எதிர்ப்பது போல் நடித்து வருகிறது எடப்பாடி அரசு – ஆ.ராசா குற்றச்சாட்டு !!!

9

மிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கு ஆப்பு வைத்து நீட் மூலம் மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்த பிஜேபிக்கு ஆதரவும் அளித்து எதிர்ப்பது போல் நடித்து வருகிறது எடப்பாடி அரசு – திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு !!!

 

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பெள்ளாதி ஊராட்சி பகுதியில் தொட்டியம் பாளையத்தில் திமுகவின் சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. இதில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும்,நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா கலந்துகொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

 

பின்னர்,கூட்டத்தில் பேசிய ஆராசா இதுவரை நமது மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவர்,பொறியாளர் என இருந்ததை நீட் என்ற அர்த்தமற்ற தேர்வை வைத்து அதில் மருத்துவத்தை பற்றிய கேள்விகளை கேட்காமல் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்தது யார் போன்ற கேள்விகளை கேட்டு மருத்துவர்களை தேர்வு செய்தால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பிய அவர் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தபட்ட மக்களின் கல்விக்காக பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கு ஆப்பு வைத்து நீட் மூலம் மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்த பிஜேபிக்கு ஆதரவு அளித்து எதிர்ப்பது போல் நடித்து வருகிறது எடப்பாடி அதிமுக அரசு என திமுக துனைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா குற்றச்சாட்டினார்.

மேலும்,கடந்த திமுக ஆட்சியில் மருத்துவம்,கல்வி போன்ற துறைகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருந்தது.தற்போது அது அதிமுக ஆட்சியில் 13வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளியது தான் இந்த ஆட்சி தற்போது ஊழல்,லஞ்சம் மட்டுமே தமிழகத்தில் நிகழ்வதாகவும் விரைவில் இந்த ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்படும் எனவும் பேசினார்.

Leave a Reply

Right Menu Icon