--- --:--:-- --

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது..!

4

மிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவர் தன்னை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குப் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இந்த வழக்கில் வசந்த் குமார், சபரிராஜன், சதீஷ் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல இளம்பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது.

 

இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணையை சிபிஐ கையிலெடுத்தது. சிபிஐ கடந்தாண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.

 

அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் அவரது கூட்டாளிகள் பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon