தகாத உறவால் மகன் உதவியுடன் கணவனை கொலை செய்த மனைவி..!
அரியலூரில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அவர் மீண்டும் கேரளாவுக்கு செல்லும் போது ஊரில் தனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்று பணத்தை எடுத்துச் சொல்லப் போவதாக கூறியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இளைய மகன் சிபிராஜை தவசீலன் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மனைவி சுதா மூத்தமகன் சிவராஜ் உதவியுடன் கணவனை கட்டையால் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.







