--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போடுவதற்காக முன்னோட்டம் அடுத்த வாரம் தொடங்குகிறது..!

6

மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரொனா தடுப்பூசி போடுவதற்காக முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

 

தடுப்பூசியை விமான நிலையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்கள், மாவட்டங்களிலிருந்து கிராமங்கள், அங்கிருந்த சுகாதார மையங்கள், மருத்துவமனைகளுக்கு எப்படி கொண்டு செல்வது, எப்படி பதப்படுத்தி குளிர்பதன கிடங்குகளில் வைப்பது, அதன் பிறகு எப்படி மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது குறித்து நான்கு மாநிலங்களிலும் 28 மற்றும் 29 தேதிகளில் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ஐ‌சி‌எம்‌ஆர் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை 22 இடங்களில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தன்னார்வலர்களை வரவேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

தடுப்பு மருந்து முதல் இரண்டு கட்ட சோதனைகளில் இருந்து பாதுகாப்பு, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றில் சிறந்தது என தெரிய வந்துள்ளதால் இது குறித்து கட்டுரையை வெளியிட மருத்துவ இதழான லான்செட் ஆர்வத்துடன் உள்ளதாகவும் ஐ‌சி‌எம்‌ஆர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon