காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் 40 நாளில் கழுத்து நெரித்துக் கொலை..!
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காதல் திருமணம் செய்துகொண்ட 40 நாளில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான அவரது வடமாநில கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதே கிராமத்தை சேர்ந்த பூங்கோதை என்ற அந்த பெண் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் போது வடமாநிலத்தை சேர்ந்த ஜோவிந்தன் என்பவரை காதலித்து கடந்த 40 நாட்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். சுரண்டையில் அவர்கள் தங்கியிருந்த வீடு வெளிப்புறமாக பூட்டப் பட்டு சாவி கீழே கிடந்துள்ளது.
வாடகை கொடுக்காமல் இருவரும் தப்பி விட்டார்கள் என எண்ணி உரிமையாளர் கதவை திறந்து பார்த்தபோது பூங்கோதை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு கணவர் இல்லாததால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பூங்கோதையின் தந்தை சலவை தொழிலாளி என்று கூறப்படும் நிலையில் அவர் வசதியான வீட்டு பெண் இல்லை என தெரிந்ததால் அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.







