21 வயதில் மேயரான இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன்..!
நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் ஆர்யா ராஜேந்திரன் என்ற 21வயது இளம்பெண் ஒருவர் மேயராக அதாவது மாநகர தாயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் முடவன்முகன் பகுதியை சேர்ந்த இளங்கலை பட்டதாரி ஆர்யா ராஜேந்திரன்.
இவர் கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். தான் வசிக்கும் பகுதியில் கவுன்சிலராக வெற்றி பெற்ற ஆர்யா ராஜேந்திரன் தற்போது திருவனந்தபுரத்திற்கு மேயராக தேர்வாகியுள்ளார்.
நாட்டிலேயே முதன்முறையாக மிகவும் இளம் வயது பெண் ஒருவர் மாநகராட்சிக்கு மேயராக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை. கல்லூரியில் பயிலும் போதே எஸ்எஃப்ஐ எனப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் மிகவும் துணிச்சலாகவும் சுறுசுறுப்பாகவும் களமாடியவராக திகழ்ந்து வந்தார்.
இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் நிர்வாகிகள் ஆர்யா ராஜேந்திரனை மேயர் பதவிக்கு பரிந்துரைக்க தேர்வு செய்ய உள்ளனர்.







