அம்மா க்ளினிக் திறப்பு விழாவுக்கு 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாடி கிராமத்தில் அம்மா கிளினிக்கை திறந்து வைக்க அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தாமதமாக வந்ததால் பெண்கள் உள்ளிட்டோர் 5 மணி நேரத்திற்கும் மேலாக பசியுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
திறப்பு விழா பகல் 12 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் மிகவும் தாமதமாக வந்ததால் மாலை 5 மணிக்குதான் திறப்பு நடைபெற்றது.
இதனால் மணிக்கணக்கில் பசியுடன் காத்துக்கிடக்க நேர்ந்ததால் பயனாளிகள் உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதேபோல் வந்தவாசி அருகே உள்ள குறிப்பேடு கிராமத்தில் அம்மா கிளினிக் திறப்பு விழாவின் போது பேனரில் தனது பெயருக்கு கீழே அச்சடிக்கப்பட்டு இருந்ததால் வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அதிருப்தி அடைந்தார்.
செய்யாறு தொகுதி உறுப்பினர் தூசி மோகனின் பெயரை தனது பெயருக்கு மேலே அச்சிட்டதற்கு அம்பேத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பேனர் அகற்றப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.







