--- --:--:-- --

விவசாயிகள் போராட்டம் – குடியரசுத் தலைவரிடம் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு

4

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நீடிக்கும் நிலையில் இதில் தலையிட்டு தீர்வு காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கோரி குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

 

இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர கூறும் 2 கோடி பேர் கையெழுத்திட்ட மனுக்களையும் ஒப்படைக்கின்றனர். இந்த மனுக்களை அளிக்கும் முன் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகள் போராட்ட பிரச்சினையில் தலையிடக் கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே குடியரசுத் தலைவர் என்ற முறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon