எம்ஜிஆர் பிறந்த நாளன்று நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குகிறாரா..?
எம்ஜிஆர் பிறந்த நாளன்று நடிகர் ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் சேவை கட்சி என்கிற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை மன்ற நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் என ரஜினி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 17ஆம் தேதி அதாவது எம்ஜிஆர் பிறந்த நாளன்று ரஜினி தன்னுடைய கட்சியை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் விவரங்களை வெளியிட போவதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





