--- --:--:-- --

புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியீடு..!

15

யோத்தியில் புதிதாக கட்டப்படும் மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி ராமர் கோவில் இடப்பிரச்சனை நெடுநாட்களாக இருந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டவும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி இருக்கும் நிலையில் மசூதி கட்டும் பணிகளை இஸ்லாமிய கலாச்சார அமைப்பு மேற்கொண்டு வந்தது.

 

இந்த நிலையில் புதிய மசூதியின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக கட்டப்பட்ட மசூதியும் பின்பகுதியில் ஒரு மருத்துவமனையும் இடம்பெறுகிறது. மேலும் ஒரு அருங்காட்சியகமும் கட்டப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon