மேட்டுப்பாளையத்தில் அரசு விழாவில் முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.போலீசார் விசாரணை !!!
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் நடக்கவிருந்த அரசு விழாவில் விழா முன்னேற்பாடுகளை பணிகளை மேற்கொண்டு வந்த கூலித்தொழி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் ராகுல்காந்தி (வயது 19) என்ற பூவரசன். கூலித்தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ராமம்பாளைத்தில் இன்று நடக்கவிருந்த அரசு விழாவிற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது, ராமம்பாளையம் நுழைவுவாயில் அருகில் தாழ்வான பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த ஒயரில் பூவரசன் கையில் வைத்திருந்த இரும்பு ராடு திடீரென உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து பூவரசன் தூக்கி வீசப்பட்டார்.
இதனையடுத்து அருகிலிருந்த சக தொழிலாளர்கள் பூவரசனை வாகனத்தில் காரமடையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பூவரசன் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,இதுகுறித்து காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தினை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,வட்டாட்சியர் சாந்தாமணி,ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






