எல்லையில் அத்துமீறினால் புதிய இந்தியா பொறுத்துக் கொண்டு இருக்காது..!
எல்லையில் அத்துமீறினால் புதிய இந்தியா பொறுத்துக் கொண்டு இருக்காது என சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே துண்டுக்கல்லில் உள்ள இந்திய விமானப்படை அகாடமி தளத்தில் நடைபெற்ற புதிய விமானப் படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ராஜ்நாத் சிங் ஏற்றுக் கொண்டார்.
விழாவில் உரையாற்றிய ராஜ்நாத்சிங் லடாக் எல்லையில் அத்துமீறிய சீனாவுக்கு இந்தியா கொடுத்த கடுமையான பதிலடிக்கு பல்வேறு நாடுகளும் பாராட்டை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
கொரொனா பெருந்தொற்றின் கடினமான காலங்களில் கூட எல்லையில் அத்துமீறல் விஉள்ளிட்ட சீனாவின் நடத்தை மிக மோசமான நோக்கங்களை பிரதிபலிப்பதாக ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.







