அரியலூரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்..!
அரியலூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளமானது பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட தானிய சேமிப்பு குழியாக இருக்கலாம் என்றுஎன்றும் அந்த பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழப்பழுவூர் அருகேயுள்ள கீழ்க்காவட்ட குறிச்சி கிராம பகுதியில் உள்ள வடக்கு பகுதியில் அமைந்துள்ள சாலையில் சுமார் பத்தடி அகழத்திற்கும் 15 அடி ஆழத்திற்கும் திடீர் பள்ளம் ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இதே தெருவில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் மண்ணைப் போட்டு மூடி அடைத்ததாக கூறப்படுகிறது.
இந்த பகுதி வேளாண் பகுதி என்பதாலும் செம்மண் பகுதி என்பதாலும் பண்டைய காலங்களில் தானியங்களை சேமித்து வைக்கும் குழியாக இருக்குமோ என்று கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. எனவே இந்த பள்ளத்தை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






