--- --:--:-- --

முதல்வர் பழனிசாமி பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி : கமல்ஹாசன்

2

முதல்வர் பழனிசாமி பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார், பிக்பாஸ் பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என்றும் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும் என்று கமல்ஹாசனை முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.

 

இந்த நிலையில் முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது என கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்றிருந்த நான் ஆணையிட்டால் பாடல் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

 

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார், ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை, அவர் எப்போதும் வால் பிடிப்பார், எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என டுவிட் செய்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon