--- --:--:-- --

மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்..!

4

ந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த இளைஞரை நடுரோட்டில் கணவன் குத்திக் கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஜோசப் என்பவரின் மனைவிக்கு தனுஷுடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

 

பலமுறை கண்டித்தும் மனைவி கேட்காததால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அங்கு உள்ள பெட்ரோல் நிலையம் அருகே மனைவி மற்றும் தனுஷை வரவழைத்துள்ளார். அதன்படி தனுஷ் வந்தவுடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக பலமுறை அவரை குத்தியுள்ளார்.

 

அவரை சுற்றியுள்ள மனைவி மற்றும் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் தடுக்க முயன்றனர். ஆனால் தனுஷ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலை செய்த ஜோசப் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரண் ஆகினார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon