முந்திரி, பாதாம் முதலியவற்றை திருடிய இரண்டு பெண்கள் கைது..!
சென்னை மடிப்பாக்கத்தில் பல்பொருள் அங்காடி கடைக்கு வந்த தாய்மார்கள் ஆடைக்குள் மறைத்து பொருட்களை திருடிச் செல்ல முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
பொருட்கள் வாங்குவது போல வந்து இரண்டு பெண்கள் ஆடைக்குள் முந்திரி, பாதாம் முதலியவற்றை மறைத்து வைத்துக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட கடை உரிமையாளர்கள் இரண்டு பெண்களையும் பிடித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி மற்றும் பேச்சியம்மாள் என்பது தெரியவந்துள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதுவரை 11 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவர்கள் திருடியது விசாரணையில் அம்பலமானதை தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






