15 நாட்களில் 100 ரூபாய் உயர்ந்த சிலிண்டரின் விலை..!
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 15 நாட்களில் 100 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீட்டு உ பயோக சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் ஒரு முறை மாற்றி அமைக்கின்றன.
இந்நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 610 ரூபாயிலிருந்து 660 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 15 நாட்களில் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் விலை 660 ரூபாயிலிருந்து 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
15 நாட்களில் சிலிண்டரின் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






