8 மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை திறப்பு..!
ஊரடங்கால் தடைவிதிக்கப்பட்ட மெரினா கடற்கரையில் 8 மாதங்களுக்குப் பிறகு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை,பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல சங்கம் சார்பில் வழக்கு தொடர்ந்த ஒன்று மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
அரசு திறக்கவில்லை என்றாலும் நீதிமன்றம் திறக்க உத்தரவிடும் என்று எச்சரித்தனர். இதற்கிடையே கடந்த மார்ச் 30ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் இன்று முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி எட்டு மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் செல்வதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர்.






