--- --:--:-- --

சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத்திடம் தொடரும் விசாரணை..!

7

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திடம் நான்காவது நாளாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த நசரத் பேட்டையில் நட்சத்திர ஹோட்டலில் கணவருடன் தங்கியிருந்த சின்னத்திரை நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டல் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் கணவர் தகராறு செய்ததாகவும் அவரை பிரிந்து வரும்படி சித்ராவின் தாயார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

 

இரு தரப்பில் இருந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

 

சித்ராவின் செல்போனில் இருந்த எஸ்எம்எஸ், புகைப்படங்கள், ஆடியோ போன்ற ஆதாரங்கள் அளிக்கப்பட்டு இருப்பதால் அவற்றை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

இதனிடையே சித்ராவின் கணவனை நான்காவது நாளாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் தாய் மற்றும் ஹேம்நாத்தின் தாயிடம் இருந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon