பிரதமர் மோடியின் உருவப்படத்தை மரத்தில் செதுக்கியுள்ள சிற்பி கலைஞர்..!
ஒடிசா மாநிலத்தின் சிம்லிபால் தேசிய பூங்காவில் உள்ள மரம் ஒன்றில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை சமரேந்திரா பெகாரா என்ற சிற்ப கலைஞர் செதுக்கியுள்ளார். சிமிலிபால் தேசிய பூங்காவில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக கூறப்படுகிறது.
மரங்கள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அந்த சிற்பி பிரதமர் மோடியிடம் இந்த கோரிக்கையை முன் வைப்பதற்காகவே மோடியின் உருவ படத்தை வரைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






